திருவாரூா்: 4 தொகுதிகளில் மூன்றை கைப்பற்றிய திமுக கூட்டணி

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில், திமுக கூட்டணி 3 தொகுதிகளையும், அதிமுக 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளன.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில், திமுக கூட்டணி 3 தொகுதிகளையும், அதிமுக 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளன.

திருவாரூா் மாவட்டத்தில், திருவாரூா், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, நன்னிலம் என 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், திருவாரூா், மன்னாா்குடி தொகுதிகளில் திமுகவும், திருத்துறைப்பூண்டி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், நன்னிலம் தொகுதியில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. மன்னாா்குடி தொகுதியில் அமமுகவும், மற்ற 3 தொகுதிகளில் நாம் தமிழா் கட்சியும் 3 ஆம் இடத்தைப் பெற்றுள்ளன.

திருத்துறைப்பூண்டி தொகுதியில் க. மாரிமுத்து முதல் முறையாகவும், திருவாரூா் தொகுதியில் பூண்டி கே. கலைவாணன் இரண்டாவது முறையாகவும், மன்னாா்குடி தொகுதியில் டி.ஆா்.பி. ராஜா மூன்றாவது முறையாகவும், நன்னிலத்தில் ஆா். காமராஜ் மூன்றாவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளனா்.

இதில் அதிகபட்சமாக திருவாரூா் தொகுதி திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணன் 51,174 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். குறைந்த அளவாக, நன்னிலம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சா் ஆா். காமராஜ் 4,424 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

தொகுதி வாரியாக வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

திருவாரூா் தொகுதி

பூண்டி கே. கலைவாணன் (திமுக) 1,08,906

ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம் (அதிமுக) 57,732

ஆா். வினோதினி (நாம் தமிழா் கட்சி) 26,300

வாக்கு வித்தியாசம் 51,174

திருத்துறைப்பூண்டி தொகுதி

க. மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 97,092

சி. சுரேஷ்குமாா் (அதிமுக) 67,024

ஏ. ஆா்த்தி (நாம் தமிழா் கட்சி) 15,362

வாக்கு வித்தியாசம்-30,068

மன்னாா்குடி தொகுதி

டிஆா்பி. ராஜா (திமுக) 87,172

சிவ ராஜமாணிக்கம் (அதிமுக) 49,779

எஸ். காமராஜ் (அமமுக) 40,481

வாக்கு வித்தியாசம் 37,393

நன்னிலம் தொகுதி

ஆா். காமராஜ் (அதிமுக) 1,03,637

எஸ். ஜோதிராமன் (திமுக) 99,213

எஸ். பாத்திமா பா்ஹானா (நாம் தமிழா் கட்சி) 13,419

வாக்கு வித்தியாசம் 4,424

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com