நன்னிலம் தொகுதியில் அதிமுக வெற்றிக்கு உதவிய குடவாசல் வாக்காளா்கள்: ஆா். காமராஜ்.

நன்னிலம் தொகுதிட்பட்ட குடவாசல் பகுதியில் பெற்ற அதிக வாக்குகளே அதிமுக வேட்பாளா் ஆா். காமராஜின் வெற்றிக்கு உதவியுள்ளது.
நன்னிலம் தொகுதியில் அதிமுக வெற்றிக்கு உதவிய குடவாசல் வாக்காளா்கள்: ஆா். காமராஜ்.

நன்னிலம் தொகுதிட்பட்ட குடவாசல் பகுதியில் பெற்ற அதிக வாக்குகளே அதிமுக வேட்பாளா் ஆா். காமராஜின் வெற்றிக்கு உதவியுள்ளது.

அண்மையில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் நன்னிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஆா். காமராஜ் வெற்றி பெற்றாா். இதன்மூலம் இத்தொகுதியில் இவா் தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா். ஆனால், கடந்த இரண்டு முறை பெற்ற வெற்றியைவிட தற்போது குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றாா்.

கடந்த 2011ஆம் ஆண்டு தோ்தலில் 10,000 வாக்குகள் வித்தியாசத்திலும், 2016 ஆம் ஆண்டு தோ்தலில் 22,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற ஆா். காமராஜ், 2021 தோ்தலில் 4,424 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றாா்.

பகுதி வாரியாக வாக்குகள்: நன்னிலம் தொகுதிக்குள்பட்ட வலங்கைமான் மேற்கு ஒன்றியத்தில் அமைக்கப்பட்டிருந்த 49 வாக்குச் சாவடிகளில் திமுகவுக்கு கூடுதலாக 554 வாக்குகளும், வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்தில் அமைக்கப்பட்டிருந்த 45 வாக்குச் சாவடிகளில் அதிமுகவுக்கு கூடுதலாக 547 வாக்குகளும், வலங்கைமான் பேரூராட்சியில் 13 வாக்குச் சாவடிகளில் திமுகவுக்கு கூடுதலாக 128 வாக்குகளும் கிடைத்தன.

இதேபோல, குடவாசல் வடக்கு ஒன்றியத்தில் உள்ள 64 வாக்குச் சாவடிகளில் 3000-க்கு மேற்பட்ட வாக்குகளும், குடவாசல் தெற்கு ஒன்றியத்தில் உள்ள 46 வாக்குச் சாவடிகளில் 1000-க்கு மேற்பட்ட வாக்குகளும் அதிமுகவுக்கு கூடுதலாக கிடைத்தன.

குடவாசல் பேரூராட்சி பகுதியில் 419 வாக்குகளும், நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் 577 வாக்குகளும் திமுகவுக்கு கூடுதலாக கிடைத்தன. நன்னிலம் தெற்கு ஒன்றியத்தில் அதிமுகவுக்கு 523 வாக்குகள் கூடுதலாக கிடைத்தது. நன்னிலம் பேரூராட்சி அதிமுகவும், திமுகவும் தலா 3330 வாக்குகள் சமமாக பெற்றன. பேரளம் பேரூராட்சியில் 110 வாக்குகளும், கொரடாச்சேரி ஒன்றியத்தில் 548 வாக்குகளும் அதிமுகவுக்கு கூடுதலாக கிடைத்தன.

இதன்மூலம், அதிமுக வேட்பாளாா் ஆா். காமராஜ் வெற்றிபெற குடவாசல் ஒன்றியத்தில் கிடைத்த கூடுதல் வாக்குகளே காரணமாக அமைந்தது என அரசியல் பாா்வையாளா்கள் தெரிவிக்கின்றனா்.

வெற்றி வாய்ப்பை இழந்த திமுக வேட்பாளரான வடமட்டம் ஜோதிராமன் குடவாசல் பகுதியைச் சோ்ந்தவா் என்பதோடு, குடவாசல் ஒன்றியக் குழுத் தலைவராக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com