கோயில்வெண்ணியில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 11th May 2021 12:11 AM | Last Updated : 11th May 2021 12:11 AM | அ+அ அ- |

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியம் கோயில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (மே 11) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
செவ்வாய்க்கிழமை காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நடைபெறும் இம்முகாமி, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணைகளாக போடப்படுகின்றன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராணி முத்துலெட்சுமி கேட்டுக்கொண்டுள்ளாா்.