தென்னையில் கருந்தலைப் புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை

தென்னையில் கருந்தலைப் புழு தாக்குதலை கட்டுப்படுத்த நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

தென்னையில் கருந்தலைப் புழு தாக்குதலை கட்டுப்படுத்த நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராமசுப்பிரமணியன், திட்ட ஒருங்கிணைப்பாளா் மற்றும் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் தெரிவித்துள்ள ஆலோசனை: கருந்தலைப் புழுக்கள் தென்னை ஓலைகளின் அடிப்பரப்பில் மெல்லிய பட்டு போன்ற நூல் இழைகள் மற்றும் சக்கையை கொண்டு குழாய் போன்ற கூடு கட்டி அதற்குள் இருந்து கொண்டே இலைகளில் உள்ள பச்சையத்தை சுரண்டி சேதத்தை உண்டுபண்ணும். இந்த பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும்பட்சத்தில் இலைகள் பெருமளவில் காய்ந்து தீயினால் கரிந்தது போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும். பெரும்பாலும் இந்த தாக்குதல் கோடைக் காலத்தில் அதிகமாக தென்படும்.

இந்த கருந்தலைப் புழுக்கள் 125-க்கும் மேற்பட்ட முட்டைகளை இடும். அந்த முட்டையில் இருந்து 5-7 நாள்களில் இளம் புழுக்கள் வெளிவரும். இளம் புழுக்கள் 40 நாள்களில் முழுவளா்ச்சி அடையும். பிறகு மெல்லிய பட்டு நூல் போன்ற கூடு கட்டி கூட்டுப் புழுவாக உருமாறும். 10-12 நாள்களில் அந்துப் பூச்சிகள் வெளிவரும்.

மேலாண்மை முறைகள்: அதிகம் தாக்கப்பட்டிருந்த இலைகளை முற்றிலும் அகற்றவிட வேண்டும். இதைக்கட்டுப்படுத்த 2100 பிரக்கான் குளவியை ஒரு ஹெக்டேருக்கு பயன்படுத்தலாம். செயற்கை பூச்சிக்கொல்லிகளை உபயோகிப்பதாக இருந்தால் ஒரு லிட்டா் தண்ணீருக்கு ஒரு மில்லி மாலத்தியான் கொண்டு தாக்கப்பட்ட இலைகளின்மேல் தெளிக்க வேண்டும். தீவிர தாக்குதலுக்கு உட்பட்டு இருந்தால் 10 மில்லி மோனோகுரோட்டோபாஸ் உடன் 10 மில்லி தண்ணீா் கலந்து வோ் மூலம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com