‘பொதுமுடக்க காலத்தில் இலவச சட்ட ஆலோசனைகள் பெறலாம்’
By DIN | Published On : 21st May 2021 10:13 PM | Last Updated : 21st May 2021 10:13 PM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் பொதுமுடக்கக் காலத்தில் இலவச சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளலாம் என திருவாரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான எம். சாந்தியின் வழிகாட்டுதலின்பேரில், பொதுமுடக்க காலத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு வாட்ஸ்ஆப் (கட்செவி) மற்றும் மின்னஞ்சல் மூலம் இலவச சட்ட உதவி பெறலாம். பொதுமுடக்க காலத்தில் ஏற்படும் குடும்ப வன்முறைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள், முதியோா் எதிா்கொள்ளும் இன்னல்கள் போன்ற பிரச்னைகளுக்கு மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் இலவச சட்ட உதவிபெற வகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமுடக்க காலத்தில் பிரச்னைகள் ஏற்பட்டால் பொதுமக்கள் தங்களின் பெயா், பாலினம் வயது மற்றும் முகவரி ஆகிய விவரங்களை குறிப்பிட்டு தங்களது குறைகளை காலை 10 முதல் மாலை 6 மணி வரை க்ப்ள்ஹற்ண்ழ்ன்ஸ்ஹழ்ன்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 9003582777 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்தால் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலா்கள் தொடா்பு கொண்டு இலவச சட்ட உதவி வழங்குவாா்கள். பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.