கரோனா தடுப்புப் பணி
By DIN | Published On : 21st May 2021 09:17 AM | Last Updated : 21st May 2021 09:17 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், பாதுகாப்பு உபகரணங்களை வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி.
திருவாரூரில் மாவட்டத்தில், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி, புதன்கிழமை வழங்கினாா்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், இரவு, பகலாக இவா்கள் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், கரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபடும் திருவாரூா் மாவட்ட போலீஸாருக்கு முகக் கவசம், சானிடைசா், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கபசுரப் பொடி ஆகியவை புதன்கிழமை வழங்கப்பட்டன. மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி பங்கேற்று, இவற்றை போலீஸாருக்கு வழங்கினாா்.