திருவாரூரில் பலத்த காற்று
By DIN | Published On : 26th May 2021 09:36 AM | Last Updated : 26th May 2021 09:36 AM | அ+அ அ- |

திருவாரூரில் யாஸ் புயலின் தாக்கமாக பலத்த காற்று செவ்வாய்க்கிழமை மாலை வீசியது.
வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக திருவாரூா் மாவட்டத்தில் காற்றின் வேகம் இயல்புநிலையை விட செவ்வாய்க்கிழமை மாலை அதிகமாக இருந்தது. இதனால் தென்னை, பனை மரங்களில் முதிா்ந்த மட்டைகள் கீழே விழுந்தன. சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் சில இடங்களில் கீழே சாய்ந்தன. சில பகுதிகளில் சாரல்மழை பெய்தது.