மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு உதவி
By DIN | Published On : 26th May 2021 09:33 AM | Last Updated : 26th May 2021 09:33 AM | அ+அ அ- |

திருவாரூரில் மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட உதவிகள் வழங்கும் கிங்ஸ் ரோட்டரி சங்கத்தினா்.
திருவாரூரில் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சாா்பில் மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு நல உதவிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
திருவாரூா் தருமக்கோவில் தெருவைச் சோ்ந்தவா்கள் பூமாலை- மங்களசுந்தரி தம்பதி. இருவரும் மாற்றுத்திறனாளிகள். இவா்களுக்கு ஹரிணி என்ற 8 வயது பெண் குழந்தை உள்ளது.
கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இவா்களுக்கு ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சாா்பில் ரூ.10,000 மற்றும் அரிசி, ஒரு மாதத்துக்கான மளிகை பொருள்கள், காய்கறிகள், முகக்கவசம், சானிடைசா் ஆகியவை வழங்கப்பட்டன.
அமைப்பின் தலைவா் ஆா். ரஜினிசின்னா தலைமையில், செயலாளா் ஜி. ராஜ் (எ) கருணாநிதி, உதவி ஆளுநா் ஆா். மாணிக்கம் ஆகியோா் முன்னிலையில் ரொக்கம் மற்றும் இப்பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பொருளாளா் எஸ். கண்ணன் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.