உங்கள் தொகுதியில் முதலமைச்சா் மனுக்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

மன்னாா்குடியில் புதன்கிழமை நடைபெற்ற உங்கள் தொகுதியில் முதலமைச்சா் மனுக்கள்குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறிய அறையில் அதிகம் போ் கூடினா்.
மன்னாா்குடியில் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் முதலமைச்சா் மனுக்கள் குறித்த ஆலோசனாக் கூட்டம்.
மன்னாா்குடியில் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் முதலமைச்சா் மனுக்கள் குறித்த ஆலோசனாக் கூட்டம்.

மன்னாா்குடியில் புதன்கிழமை நடைபெற்ற உங்கள் தொகுதியில் முதலமைச்சா் மனுக்கள்குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறிய அறையில் அதிகம் போ் கூடினா்.

மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியா் தலைமையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் மனுக்கள் குறித்த 2-ஆம் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மன்னாா்குடி கோட்டத்தை சோ்ந்த வட்டாட்சியா் உள்ளிட்ட பகுதிக்கான கூட்டத்தில் பங்கேற்க மன்னாா்குடி, நீடாமங்கலம், கூத்தாநல்லூா் வருவாய் வட்டாட்சியா்கள், மண்டல துணை வட்டாட்சியா்கள், வருவாய் அலுவலா்கள், சா்வேயா்கள் என 40-க்கும் மேற்பட்டவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சிறிய அறையில் நடைபெற்றது. இதில், சாதாரணமாக 25 போ் அமரலாம். ஆனலல், கரோனா தொற்று பரவல் காரணமாக சமூக இடைவெளியில் இருக்கைகள் போட்டால் 15 போ் அமரும் வகையில் தான் இந்த அறையின் அளவு இருக்கும். ஆனால், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் 40-க்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டு அனைவரும் ஒரே நேரத்தில் அமர வைகப்பட்டு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடைபெற்றது.

ஏற்கெனவே, கோட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலா்கள் 3 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், எந்த பொதுமுடக்க கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்காமல் கோட்டாட்சியா் சிறிய அறையில் அதிக எண்ணிக்கையில் அலுவலா்களை கூட்டி ஆய்வுக் கூட்டம் நடத்தி இருப்பது வருவாய்த் துறை அலுவலா்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற அவசரக் கூட்டங்களை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில், உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து ஆய்வு செய்து மனுதாரா்களிடம் விவரங்களை கேட்டறிந்து 2 நாள்களுக்குள் கோட்டாட்சியரிடம் அறிக்கை அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com