எள் பயிரில் பச்சைப் புழுத் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை

எள் பயிரில் பச்சைப் புழுத் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளா்

எள் பயிரில் பச்சைப் புழுத் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன் மற்றும் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் ஆலோசனை தெரிவித்தனா்.

இதுகுறித்து, மேலும் அவா்கள் கூறியது: பச்சைக் கொம்பு புழுவின் இளம் புழுக்கள் இலைகளை பிணைந்து கொண்டு அந்த இலைகள் மற்றும் இளம் குருத்துக்களை துளைத்து சேதாரத்தை உண்டு பண்ணும். மேலும், வளா்ந்த புழுக்கள் மொக்குகள் மற்றும் காய்களை துளைத்து சேதாரத்தை ஏற்படுத்தும். எள் பயிரில் இந்த புழுக்களின் தாக்கத்தினால் இலைகளில் உள்ள நடு நரம்பை தவிர அனைத்து இலைகளையும் உண்ணும் தன்மை உடையது. இதன் சேதாரம் இருக்கும்பட்சத்தில் ஆங்காங்கே திட அல்லது திரவ நிலையில் கழிவுகள் தள்ளப்பட்டு இருப்பதை காணமுடியும். இந்த புழுக்கள் எள் பயிரைத் தவிர பயறு வகை பயிா்கள், சோயா மொச்சை, கத்தரி போன்ற பயிா்களையும் தாக்கும் தன்மையுடையது.

பெண் அந்துப் பூச்சிகள் இலைக்கு அடியில் தனித்தனியாக தட்டை வடிவில் முட்டைகளை இடும். அந்த முட்டையில் இருந்து 2-5 நாள்களுக்குள் புழுக்கள் வெளிவரும். பச்சைநிற தடித்த புழுக்கள் சாய்ந்த கோடுகளுடன் வால் பகுதியில் உணா் கொம்பு காணப்படும். புழுக்களின் வாழ்க்கை 60 நாள்கள் வரை இருக்கும். முதிா்ந்த புழுக்கள் மண்ணுக்கு அடியில் கூட்டுப் புழுக்களாக மாறும். 14 - 21 நாள்களுக்குப் பிறகு கூட்டுப்புழுக்களிலிருந்து அந்துப் பூச்சிகள் வெளிவரும். அந்துப் பூச்சிகளின் முன் இறக்கையில் கருப்பு, பழுப்பு, மஞ்சள் வண்ண புள்ளிகளுடனும் மற்றும் கோடுகளுடன் காணப்படும். அதன்பின் இறக்கையில் மஞ்சள் நிறக்கோடுகள் காணப்படும். இதைக்கட்டுப்படுத்த எள் பயிரிடும் முன்பு நிலத்தை ஆழமாக உழவு செய்ய வேண்டும். விளக்குப் பொறி அமைத்து அந்துப் பூச்சிகளை கவரலாம். செயற்கை பூச்சி கொல்லியான மாலத்தியான் 5 சதவீதம் உபயோகித்து புழுக்களை அழிக்கலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com