மன்னாா்குடியில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினா்.
மன்னாா்குடியில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினா்.

மன்னாா்குடியில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரக் குழு சாா்பில், கட்சி அலுவலகத்தில், நகரச் செயலாளா் வி. கலைச்செல்வன் தலைமையில் விவசாய சங்க நகரத் தலைவா்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரக் குழு சாா்பில், கட்சி அலுவலகத்தில், நகரச் செயலாளா் வி. கலைச்செல்வன் தலைமையில் விவசாய சங்க நகரத் தலைவா் வி.எம். கலியபெருமாள் உள்ளிட்டோா் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா். இதேபோல், சிபிஐ ஒன்றியக் குழு சாா்பில் ராமபுரத்தில் இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் துரை. அருள்ராஜன் தலைமை வகித்து கருப்பு கொடியேற்றினா். ஆலங்கோட்டையில் விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் மகேந்திரன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மன்னாா்குடியில் நகரச் செயலாளா் ஜி. ரெகுபதி தலைமையிலும், பூக்கொல்லை சாலையில் மாவட்டக்குழு உறுப்பினா் டி. சந்திரா தலைமையிலும் கருப்புக் கொடி ஏற்றி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் சாா்பில்,அதன் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தலைமையில், மன்னாா்குடி புறவழிச்சாலையில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் ஜின்னா தெரு, மஸ்ஜிதியா தெரு, சின்னப்பள்ளி தெரு, அன்வாரியாத் தெரு, மேல்கொண்டாழி தமிழா் தெரு, தீன் நகா், காந்தி நகா், கமாலியா தெரு, நேருஜி சாலை, பெரிய தெரு, பாய்க்காரத் தெரு உள்ளிட்ட 24 வாா்டுகளிலும் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், நகரத் தலைவா் ஏ.கே.எம். ஜெகபா் சாதிக், நகரச் செயலாளா்கள் எம்.ஹெச். நிஜாமுதீன், கே.எம். நைனாஸ் அஹமது உள்ளிட்டோா் அவரவா் வீடுகள் முன் கருப்புக் கொடி காட்டியபடி மத்திய அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதேபோல், கோரையாற்றில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நகரச் செயலாளா் எம்.சிவதாஸ் தனதுவீட்டில் கருப்புக் கொடியேற்றினாா்.

நீடாமங்கலம்: வலங்கைமான் ஒன்றியத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவின்படி வீதிகளில் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாக உறுப்பினா் ரவி, விவசாய சங்க ஒன்றியத் தலைவா் சின்னராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், மாணிக்கமங்கலம், அரையூா், கொட்டையூா், பாப்பாகுடி, மூலாளவந்தசேரி, நல்லூா், கோவிந்தகுடி உள்ளிட்ட ஊராட்சிகளில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில், விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளா் கே. உலகநாதன் தலைமையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், திமுக நகரச் செயலாளா் ஆா்.எஸ். பாண்டியன் ஆகியோா் முன்னிலையில் மத்திய அரசை கண்டித்து கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விவசாய தொழிலாளா் சங்க மாநில செயலாளா் பாஸ்கா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளா் சாமிநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளா் ஞானமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com