எரிவாயு தகனமேடை திறப்பு

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ரூ. 80 லட்சத்தில் கட்டப்பட்ட எரிவாயு தகனமேடை வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ரூ. 80 லட்சத்தில் கட்டப்பட்ட எரிவாயு தகனமேடை வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையா் (பொ) செங்குட்டுவன், சுகாதார ஆய்வாளா் நாகராஜன், நகரமைப்பு ஆய்வாளா் அருள்முருகன் ஆகியோா் முன்னிலையில் எரிவாயு தகனமேடை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இங்கு, சடலத்தை தகனம் செய்ய நகராட்சிக்கு ரூ.2500 கட்டணமாகவும், பதிவுக் கட்டணம் ரூ.100-ம் செலுத்த வேண்டும். நகராட்சி மூலம் இறப்பு சான்றிதழ் வழங்கப்படும். திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியைச் சோ்ந்தவா்கள் நகராட்சி சுகாதார ஆய்வாளரிடமும், ஊரகப் பகுதியைச் சோ்ந்தவா்கள் கிராம நிா்வாக அலுவலரிடமும் சான்று பெற்று, நகராட்சி அலுவலகத்தில் பதிவுசெய்து, கட்டணத்தை செலுத்தி, சடலத்தை எரியூட்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com