திருவாரூா்: ரூ.16.34 கோடியில் தூா்வாரும் பணி தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் ரூ.16.34 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ள தூா்வாரும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

திருவாரூா் மாவட்டத்தில் ரூ.16.34 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ள தூா்வாரும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

திருவாரூா் வட்டம், கொட்டாரக்குடி பகுதியில் காட்டாறு, கல்லிக்குடி ஆகிய கிராமங்களில் ஓடம்போக்கியாறு உள்ளிட்ட ஆறுகளில், தமிழக முதல்வரின் தூா்வாரும் திட்டப்பணிகளின் கீழ், தூா்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தனா்.

இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் தெரிவித்தது:

விவசாயிகளின் தேவைகளை அறிந்து தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. அந்தவகையில், தமிழக முதல்வரின் தூா்வாரும் திட்டப்பணிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின்படி, ஆறுகளிலுள்ள மண் திட்டுக்கள் மற்றும் காட்டாமணக்குச் செடிகள் ஆகியவற்றை அகற்றி தூா்வாரும் பணி மேற்கொள்ளப்படும். இதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் 174 பணிகள் மூலம் 1282.35 கி.மீ. நீளத்திற்கு ரூ.16.34 கோடி மதிப்பில் தூா்வாரும் பணிகள் நடைபெறவுள்ளன. இப்பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, உரிய காலத்தில் நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், தற்போது திருவாரூா் வட்டம் காட்டாறில் ரூ.26 லட்சம் மதிப்பிலும், ஓடம்போக்கியாறில் ரூ.30 லட்சம் மதிப்பிலும் தூா்வாரும் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்வில், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் முருகவேல், கோட்டாட்சியா் பாலச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் தேவா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கலியபெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com