கரோனா தடுப்புப் பணியில் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்கலாம்

கரோனா தடுப்புப் பணியில் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

கரோனா தடுப்புப் பணியில் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் தலைமையில் கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவலைத் தடுக்கும் பணியில், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில குழுவுக்கான மின்னஞ்சல் முகவரி ற்ய்ய்ஞ்ா்ஸ்ரீா்ா்ழ்க்ண்ய்ஹற்ண்ா்ய்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னலம் கருதாத தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவ இக்குழுக்கள் பாலமாக செயல்படும்.

தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் ட்ற்ற்ல்ள்://ன்ஸ்ரீஸ்ரீ.ன்ட்ஸ்ரீண்ற்ல்.ண்ய்/ய்ஞ்ா்ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

கூடுதல் தகவல்களுக்கு திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் கட்டளை மையம் தொலைபேசி 04366-226623 என்ற எண்ணிலும்,  மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com