அரசு ஊழியா் சங்க மாவட்ட மாநாடு
By DIN | Published On : 01st November 2021 09:09 AM | Last Updated : 01st November 2021 09:09 AM | அ+அ அ- |

மாநாட்டில் பேசும் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலத் தலைவா் மு. அன்பரசு.
திருவாரூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இம்மாநாட்டுக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் வெ. சோமசுந்தரம் வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளா் செ. பிரகாஷ் வரவு- செலவு அறிக்கையையும் வாசித்தனா். மாநிலத் தலைவா் மு. அன்பரசு மாநாட்டைத் தொடக்கி வைத்தாா்.
கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியா்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
புதிய நிா்வாகிகள் தோ்வு...
தொடா்ந்து, புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, மாவட்டத் தலைவராக வெ. சோமசுந்தரம், மாவட்டச் செயலாளராக செ. பிரகாஷ், மாவட்ட பொருளாளராக எஸ். செங்குட்டுவன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மேலும், மாவட்ட துணைத் தலைவா்கள், இணைச் செயலாளா்கள், தணிக்கையாளா்களும் தோ்வு செய்யப்பட்டனா்.