கூத்தாநல்லூர்: அரசுப் பெண்கள் பள்ளிக்கு ரூ.88.07 லட்சத்தில் புதிய கட்டடம் திறப்பு
By DIN | Published On : 03rd November 2021 02:10 PM | Last Updated : 03rd November 2021 02:39 PM | அ+அ அ- |

அரசுப் பெண்கள் பள்ளிக்கு ரூ.88.07 லட்சத்தில் புதிய கட்டடம் திறப்பு
கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில், கூடுதல் வகுப்பறைக்கான கட்டடம் திறக்கப்பட்டது.
இந்தக் கட்டடத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.அதன் தொடர்ச்சியாக, கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எளிமையான நிகழ்ச்சி நடத்தப்பட்டன.
நிகழ்விற்கு, மாவட்ட ஆட்சியர் பா.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் முன்னிலை வகித்தார். வகுப்பறைக்குள், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர், தலைமையாசிரியர் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

புதிய கட்டடத்தில், 6 வகுப்பறைகள், ஒரு நூலகம் மற்றும் 8 கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்வில், மன்னார்குடி கோட்டாட்டாசியர் அழகர்சாமி, வட்டாட்சியர் என்.கவிதா, நகராட்சி ஆணையர் ராஜகோபால், திமுக நகர அவைத் தலைவர் எஸ்.வி. பக்கிரிசாமி, நகரப் பொருளாளர் ஏ.ஏ.அமீர்தீன், நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுக்காப்புச் சங்கத் தலைவர் கருணாநிதி
மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.