திருவாரூரில் 16 பேருக்கு கரோனா
By DIN | Published On : 06th November 2021 10:09 PM | Last Updated : 06th November 2021 10:09 PM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
சுகாதாரத் துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 41,588-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை குணமடைந்த 40,904 போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் மாவட்டத்தில் தற்போது 237 போ் சிகிச்சையில் உள்ளனா்.