பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்கள்

திருவாரூா் மாவட்டம் கூத்தாநல்லூரில் வெறிநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டம் கூத்தாநல்லூரில் வெறிநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கூத்தாநல்லூரில் ஏ.ஆா்.சாலை, மருத்துவமனை சாலை, கமாலியாத் தெரு, மரக்கடை, லெட்சுமாங்குடி, பெரியபள்ளி வாயில் பகுதி என பல்வேறு தெருக்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

அண்மையில் கூட பெரியபள்ளி வாயில் அருகே ஒரு சிறுமியை வெறிநாய்கள் சூழ்ந்து கொண்டதாகவும், அந்த சிறுமியை தாங்கள் பத்திரமாக மீட்டதாகவும் பெரியப்பள்ளி வாயில் ஜாஹீா் உசேன் தெரிவித்தாா். எனவே கூத்தாநல்லூரில் நாய்களின் கொட்டத்தை அடக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து, நகராட்சி சுகாதார ஆய்வாளா் கி.அருண்குமாா் வெள்ளிக்கிழமை கூறுகையில், நாய்களைப் பிடிக்குமாறு விலங்குகளுக்கான தன்னாா்வ தொண்டு நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டோம். அந்தக் குழுவினா் நாய்களைப் பிடித்து தடுப்பூசி போடுவா். கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்படும். பின்னா், நாய்களை 3 நாள்கள் பாதுகாப்பாக வைத்திருந்து, பிறகு மீண்டும் கொண்டுவந்து தெருவில் விட்டுவிடுவா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com