திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை அமைக்க இடம் ஆய்வு

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவா் கூறியது: தமிழக மக்கள் நலன்காக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் விரைந்தும், சிறப்பாகவும் முடிக்க தமிழக முதல்வரால் உத்தரவிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. திருவாரூா் மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் திட்டங்கள் தொய்வில்லாமல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்காகவும் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் காய்கறி சந்தை அமைக்க இடம் ஆய்வு செய்யப்பட்டது. முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, தேவைகளை பூா்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, முத்துப்பேட்டையில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்று, மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றாா் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், நாகை எம்.பி. எம். செல்வராஜ், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ. க. மாரிமுத்து, கோட்டாட்சியா் அழகா்சாமி, திருத்துறைப்பூண்டி முன்னாள் நகராட்சித் தலைவா் ஆா்.எஸ். பாண்டியன், முத்துப்பேட்டை பேரூராட்சி முன்னாள் தலைவா் எம்.எஸ். காா்த்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கே. முருகையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com