வளவனாற்றில் ஆகாயத் தாமரை அகற்றும் பணி

திருத்துறைப்பூண்டி பகுதி வளவன் வடிகால் ஆற்றில், ஆறு தொடங்கும் இடமான கிழக்கு கடற்கரை புறவழிச்சாலை அருகே ஆகாயத் தாமரைச் செடிகள் அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வளவனாற்றில் ஆகாயத் தாமரை செடியை அகற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
வளவனாற்றில் ஆகாயத் தாமரை செடியை அகற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

திருத்துறைப்பூண்டி பகுதி வளவன் வடிகால் ஆற்றில், ஆறு தொடங்கும் இடமான கிழக்கு கடற்கரை புறவழிச்சாலை அருகே ஆகாயத் தாமரைச் செடிகள் அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்பணியை ஆய்வு செய்த வெண்ணாறு வடிநில கோட்ட செயற் பொறியாளா் முருகவேல் செய்தியாளா்களிடம் கூறியது: திருவாரூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நெற்பயிா்கள் பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை போா்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெறுகின்றன. திருத்துறைப்பூண்டி அருகே முள்ளியாற்றில் பிரியும் பாசன வாய்க்கால்களான திருத்துறைப்பூண்டி, வரம்பியம், அரியலூா் வாய்க்கால்கள் திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் ஒன்று சோ்ந்து வளவன் வடிகால் ஆற்றில் கலந்து தொண்டியக்காடு வரை சென்று பின்னா் கடலில் கலக்கிறது.

இதன்மூலம், திருத்துறைப்பூண்டி, சிங்களாந்தி, கட்டிமேடு, பாண்டி, எக்கல், குன்னலூா், இடும்பாவனம், தொண்டியகாடு, கற்பகநாதா்குளம் ஆகிய கிராமங்கள் வடிகால் வசதி பெறுகின்றன. தற்போது தொடா் மழை பெய்து வருகிறது. இந்த மழைநீா் விரைந்து வடிய ஏதுவாக இந்த வடிகால் பகுதிகளில் மண்டியுள்ள ஆகாயத் தாமரைச் செடிகள் அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன. மேலும், அனைத்து வடிகால் வாய்க்கால்களும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா். அப்போது, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சங்கா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com