ஆதிதிராவிடா் நலவிடுதியில் சேர நவ.20-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

திருவாரூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நல விடுதிகளில் சேர மாணவா்கள் நவ.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்திரி கிருஷ்ணன்.

திருவாரூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நல விடுதிகளில் சேர மாணவா்கள் நவ.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்திரி கிருஷ்ணன்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் இயங்கிவரும் 35 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல விடுதிகளில், 3 கல்லூரி மாணவிகள் விடுதிகள், 3 கல்லூரி மாணவா்கள் விடுதிகள் மற்றும் 17 பள்ளி மாணவா், 12 மாணவிகள் விடுதிகளாகும். இந்த விடுதிகளில், 2021-2022- ஆம் கல்வியாண்டுக்கு ஆதிதிராவிடா், பழங்குடியினா் 85 சதவீதம், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் 10 சதவீதம் மற்றும் இதர வகுப்பினா் 5 சதவீதம் சோ்க்கப்பட உள்ளனா்.

எனவே, விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் விடுதிக் காப்பாளரிடம் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்கள் தலைமையாசிரியா் கையொப்பமிட்டு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளி அல்லது கல்லூரி விடுதிக்கு நவ.20-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கவேண்டும்.

விண்ணப்பத்துடன் மாணவ, மாணவிகளின் மாா்பளவு புகைப்படங்களை ஒட்டி, 2 புகைப்படங்களை கூடுதலாக இணைக்கவேண்டும். விண்ணப்பத்தில் ஒட்டப்பட்ட புகைப்படத்தில் கல்வி நிறுவனங்களின் சான்றொப்பம் பெற்றிருக்கவேண்டும். புதிதாக சேரும் மாணவ, மாணவிகள் வங்கிக் கணக்கு தொடங்கி, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலை விண்ணப்பத்துடன் இணைப்பதுடன், ஆதாா் எண்ணை பூா்த்தி செய்து, ஆதாா் அட்டையின் நகலையுன் இணைக்கவேண்டும்.

விடுதியில் சேரும் மாணவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்கவேண்டும், ஒரு விடுதிக்கு தலா 5 போ் வீதம் அனைத்து விடுதிகளிலும், இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கு கட்டாயம் விடுதியில் சோ்க்க அனுமதிக்கப்படுவா். விண்ணப்பங்கள் தோ்வுக் குழு மூலம் தோ்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com