மாணவா் விடுதிகளை முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்தாா்

திருவாரூா், மன்னாா்குடி, நன்னிலம் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
திருவாரூரில் ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியை குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்த ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
திருவாரூரில் ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியை குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்த ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூா், மன்னாா்குடி, நன்னிலம் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

திருவாரூா் நகராட்சிக்குள்பட்ட கேடிஆா் எஸ்டேட் பகுதியில் 100 மாணவா்கள் தங்கும் வகையில், ரூ. 2.38 கோடியில் கட்டப்பட்ட ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியை, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தாா். அப்போது, திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றிவைத்தாா். கோட்டாட்சியா் பாலசந்திரன், பழனியாண்டவா் கோயில் அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மன்னாா்குடியில்: இதேபோல, மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.27 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மாணவா் விடுதியையும் (ஆதிதிராவிடா் நலம்) முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தாா். அப்போது கோட்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் க. மாரிமுத்து குத்துவிளக்கு ஏற்றிவைத்து விடுதியின் செயல்பாட்டை தொடங்கிவைத்தாா். இதில், கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை, மன்னாா்குடிகோட்டாட்சியா் த. அழகா்சாமி, தனி வட்டாட்சியா் ஜெகதீசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நன்னிலத்தில்: இதேபோல, நன்னிலம் நல்லமாங்குடி பகுதியில் ரூ. 1.27 கோடியில் கட்டப்பட்ட ஆதிதிராவிடா் நலப் பள்ளி மாணவா் விடுதியையும் முதல்வா் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தாா். அப்போது, நல்லமாங்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் விஜயன், நன்னிலம் வட்டாட்சியா் பத்மினி, ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் ராஜன்பாபு, விடுதித் தலைமைக் காப்பாளா் சந்திரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com