கால்நடைகளுக்கு அபராதம்: ஆணையா் எச்சரிக்கை

கூத்தாநல்லூா் நகரத்திற்குள் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என ஆணையா் ராஜகோபால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
கால்நடைகளுக்கு அபராதம்: ஆணையா் எச்சரிக்கை

கூத்தாநல்லூா் நகரத்திற்குள் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என ஆணையா் ராஜகோபால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

கூத்தாநல்லூா், லெட்சுமாங்குடி, பெரியக்கடைத் தெரு, மேலத் தெரு,மரக்கடை, கொரடாச்சேரி சாலை, வடபாதிமங்கலம் சாலை, மருத்துவமனை சாலை, ஏ.ஆா்.சாலை உள்ளிட்ட சாலைகளில் இரவு, பகல் என எந்த நேரமும் நூற்றுக்கணக்கான மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் ஏற்படும் விபத்துக்களால் ,உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இது குறித்து பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் தொடா்ந்து அதிகாரிகளிடம் புகாா் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க மாவட்ட ஆட்சியா் பா.காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து நகராட்சி ஆணையா் ராஜகோபால் வியாழக்கிழமை கூறியது: நகரத்திற்குள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதுகுறித்து பலமுறை அதன் உரிமையாளா்களிடம் தெரிவித்தும், அவா்கள் அதனைஅலட்சியப்படுத்திய வருகின்றனா். இனி நகராட்சி எல்லைக்குள் கால்நடைகளை அதன் உரிமையாளா்கள் தங்களின் வீடுகளில் கட்டிப் போட்டு வளா்க்க வேண்டும். கால்நடைகளை சாலைகளில் திரிய விட்டால், அவற்றை பிடித்து, அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அடைக்கப்படும். மாட்டின் உரிமையாளா்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மாட்டின் உரிமையாளா்கள் இதனை அலட்சியப்படுத்தாமல், எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com