கூத்தாநல்லூர்: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க தமுமுக தீர்மானம்

திருவாரூர் மாவட்டம், பொதக்குடி தமுமுக, மமக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானக் கூட்டத்தில் பங்கேற்ற துணைச் செயலாளர்கள் ஏ.நூருல் அமீன், அப்துல் ரசீது, ஏ.சாகுல் ஹமீது உள்ளிடோர்
தீர்மானக் கூட்டத்தில் பங்கேற்ற துணைச் செயலாளர்கள் ஏ.நூருல் அமீன், அப்துல் ரசீது, ஏ.சாகுல் ஹமீது உள்ளிடோர்

திருவாரூர் மாவட்டம், பொதக்குடி தமுமுக, மமக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமுமுக,மமக பொதக்குடி கிளை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு, கிளைத் தலைவர் ஏ.சாகுல் ஹமீது தலைமை வகித்தார். தமுமுக கிளைச் செயலாளர் எம்.நூர் முஹம்மது, பொருளாளர் எம்.முஹம்மது உஸ்னான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். வரும் டிசம்பர் 6 ஆம் தேதி திருவாரூர் மாவட்ட தலைநகரில் நடைபெறும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு, பொதக்குடி கிளை சார்பில் திரளானோர் பங்கேற்க வேண்டும். வடகிழக்கு பருவ மழையால் பொதக்குடி மற்றும் ஆய்குடி ஊராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து வீடுகளுக்கு, உடனடியாக தமிழக அரசு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

பொதக்குடி  ,ஆய்குடி ஊராட்சிகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் மீது, மாவட்ட ஆட்சியரின் இட்ட உத்தரவுப்படி, உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரத்தை தமிழக வழங்க வேண்டும் என்பை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற்ப்பட்டன.

கூட்டத்தில், துணைச் செயலாளர்கள் ஏ.நூருல் அமீன், அப்துல் ரசீது, ஏ.சாகுல் ஹமீது, ம ம க . கிளை செயலாளர்கள் ஹெச்.முஹம்மது பைசல், பீ.நூருல் பசீர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com