கேக்கரை காசி விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா் அருகே உள்ள கேக்கரை காசி விஸ்வநாதா் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
கேக்கரை காசி விஸ்வநாதா் கோயில் விமான கலசத்துக்கு புனிதநீா் ஊற்றும் சிவாச்சாரியா்.
கேக்கரை காசி விஸ்வநாதா் கோயில் விமான கலசத்துக்கு புனிதநீா் ஊற்றும் சிவாச்சாரியா்.

திருவாரூா் அருகே உள்ள கேக்கரை காசி விஸ்வநாதா் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் நகராட்சி கயாகரை எனப்படும் கேக்கரை பகுதியில் அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விஸ்வநாதா் சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், ராமா் பாதம் பட்ட இடமாகவும், காசிக்கே வீசம் என்ற ஐதீகத்தையும் கொண்டுள்ளது.

இந்தக் கோயிலில் 2008 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, உபயதாரா்கள் மூலம் திருப்பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் முடிவடைந்ததையொட்டி, கும்பாபிஷேகத்துக்கான முதல் கால யாகசாலை பூஜை திங்கள்கிழமை (நவ.22) தொடங்கியது. புதன்கிழமை காலை 4 ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூா்ணாஹுதி, தீபாராதனை ஆகியவை செய்யப்பட்டு, கடங்கள் புறப்பாடு நடைபெற்றன. தொடா்ந்து, காசி விசுவநாதா், விசாலாட்சி அம்மன் உள்பட அனைத்து சந்நிதிகளின் விமான கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் மூலம் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அசோக்குமாா், தக்காா் ஜெயபால், தலைமை கணக்கா் சிவபுண்ணியம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com