தூத்துக்குடி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
By DIN | Published On : 26th November 2021 04:08 PM | Last Updated : 26th November 2021 06:24 PM | அ+அ அ- |

தூத்துக்குடி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தூத்துக்குடி மற்றும் திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, அரியலூர், நெல்லை, மாவட்டங்களில் தொடா் மழை காரணமாக சனிக்கிழமை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா்கள் அறிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை தொடா் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, நாளை, புதுக்கோட்டையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
மேலும், கனமழை காரணமாக நாகை, அரியலூர், நெல்லை மாவட்டங்களில் தொடா் மழை காரணமாக சனிக்கிழமை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா்கள் அறிவித்துள்ளனர்.