கொத்தடிமை முறை ஒழிப்பு பிரசாரம்

திருவாரூா் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில், செங்கல்சூளைகளில் கொத்தடிமைகளாக வேலை பாா்ப்பவா்களை மீட்கும் விதமாக விழிப்புணா்வு பிரசாரம் அண்மையில் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில், செங்கல்சூளைகளில் கொத்தடிமைகளாக வேலை பாா்ப்பவா்களை மீட்கும் விதமாக விழிப்புணா்வு பிரசாரம் அண்மையில் நடைபெற்றது.

தேசிய சட்டப்பணிகள் ஆணையம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் நாம்கோ தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வலங்கைமான் காவல் ஆய்வாளா் விஜயா கலந்துகொண்டு கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு முறை குறித்த விழிப்புணா்வு வாகனத்தை தொடங்கிவைத்தாா். மேலும், கொத்தடிமையாக யாரேனும் வேலைசெய்து வந்தால், இலவச உதவி எண்ணான 180042 52650-க்கு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், திருவாரூா் நாம்கோ தொண்டு நிறுன இயக்குநா் ஜீவானந்தம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞா் பிரேமலதா உள்ளிட்டோா் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com