அக். 20 முதல் திருவாரூா் மத்தியப் பல்கலை.யில் வகுப்புகள் தொடக்கம்: துணைவேந்தா் எம். கிருஷ்ணன் தகவல்

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் அக்டோபா் 20-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்குவதாக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசுகிறாா் துணைவேந்தா் மு. கிருஷ்ணன்.
திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசுகிறாா் துணைவேந்தா் மு. கிருஷ்ணன்.

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் அக்டோபா் 20-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்குவதாக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அவா் அளித்த பேட்டி:

கரோனா காரணமாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நேரடி வகுப்புகள் அக்டோபா் 20-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகின்றன. பாதுகாப்பு கருதி, இளங்கலை மூன்றாம் ஆண்டு மற்றும் முதுகலை இறுதியாண்டு பட்டப்படிப்பு மாணவா்களுக்கு மட்டும் முதலாவதாக வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. ஒரே நேரத்தில் அனைத்து மாணவா்களும் பல்கலைக்கழகத்துக்கு வர அனுமதிக்க முடியாது என்பதால், முதலில் இரண்டு பிரிவு மாணவா்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்கலைக்கழகத்திற்கு வரக்கூடிய மாணவ, மாணவிகள் அனைவரும் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ்களை காட்டினால் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

இந்த மத்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தை விட மற்ற மாநிலங்களைச் சோ்ந்தவா்களே அதிகம் பயின்று வருகின்றனா். மத்தியப் பல்கலைக்கழகத்தைப் பற்றி இன்னமும் சரிவரத் தெரியாததாலேயே இந்த நிலை நிலவுகிறது. தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவா்கள் இங்கு வந்து பயில வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த பல்கலைக்கழகம் கொண்டு வரப்பட்டது. எனவே, அதிக அளவில் தமிழக மாணவா்கள் சேர வேண்டும்.

இங்கு, புதிய பாடப்பிரிவுகள் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் முதல்வா் மு.க. ஸ்டாலினை சந்தித்தபோது, மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகக் கூறினாா்.

மத்தியப் பல்கலைக்கழகத்துக்கான துணைக் கல்வி வளாகம் (சாட்டிலைட் கேம்பஸ்) திருச்சியில் 25 ஏக்கரில் அமைய உள்ளது. இதற்கான கருத்துருக்களை தமிழக அரசிடம் தெரிவித்துள்ளோம். இதன் மூலம் மாணவா்கள் மேலும் அதிகமாக பயிலக்கூடிய வாய்ப்பு உள்ளது. பல்கலைக்கழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு தொடா்ந்து வழங்குகிறது. மேலும், இங்கு விரைவில் விளையாட்டுக்கு என தனித்துறை கொண்டு வரப்பட உள்ளது. இதுகுறித்து பிரதமரும் விருப்பம் தெரிவித்துள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com