முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
நீடாமங்கலத்திலிருந்து 2 ஆயிரம் டன் நெல் அரைவைக்காக ஓசூருக்கு அனுப்பிவைப்பு
By DIN | Published On : 11th October 2021 08:18 AM | Last Updated : 11th October 2021 08:18 AM | அ+அ அ- |

நீடாமங்கலத்திலிருந்து அரைவைக்காக 2 ஆயிரம் டன் சன்னரக நெல் ஓசூருக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் வட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் 158 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன.
பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரைவைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.