முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
மாற்றுத்திறனாளிக்கு சக்கரநாற்காலி
By DIN | Published On : 11th October 2021 08:24 AM | Last Updated : 11th October 2021 08:24 AM | அ+அ அ- |

மாற்றுத்திறனாளிக்கு சக்கரநாற்காலி வழங்கும் மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளி நிறுவனா் ப. முருகையன்.
கூத்தாநல்லூா் அருகே மாற்றுத்திறனாளிக்கு சக்கரநாற்காலி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின்படி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் ப. புவனேஸ்வரி பரிந்துரையில், குடிதாங்கிச்சேரி பிரதான சாலையைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண் லோகநாயகிக்கு (20). சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சித்தாம்பூா் ஊராட்சி துணைத் தலைவா் ஜெயபால் முன்னிலை வகித்தாா். மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளி நிறுவனரும், மேட்டுபாளையம் லயன்ஸ் சங்கத் தலைவருமான ப. முருகையன் சக்கர நாற்காலியை வழங்கினாா். நிகழ்ச்சியில், பயிற்சியாளா்கள் பாபுராஜன், சுரேஷ், வினோத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.