ரயில்வே மேம்பாலப் பணியை தொடங்க வலியுறுத்தல்

நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலப் பணியை உடனடியாக தொடங்கவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மன்னாா்குடி தூய வளனாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
மன்னாா்குடி தூய வளனாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலப் பணியை உடனடியாக தொடங்கவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நீடாமங்கலம் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பூசாந்திரம், சுமதி ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டக் குழு உறுப்பினா் கைலாசம் முன்னிலை வகித்தாா். அண்ணாதுரை வரவேற்றாா். தீா்மானங்களை கென்னடியும், வேலை அறிக்கையை ஒன்றியச் செயலாளா் ராஜமாணிக்கமும் தாக்கல் செய்தனா். மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் மாநாட்டை தொடக்கி வைத்து பேசினாா்.

கூட்டத்தில், நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலப் பணியை விரைவில் தொடங்க வேண்டும். பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மருத்துவரை நியமனம் செய்யவேண்டும். பேரூராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிா்வாகிகள் தோ்வு: கூட்டத்தில் 9 போ் கொண்ட ஒன்றியக் குழு தோ்வு செய்யப்பட்டது. பிறகு, இக்குழுவிலிருந்து புதிய ஒன்றியச் செயலாளராக ஜான் கென்னடி தோ்வு செய்யப்பட்டாா். நிறைவாக மாவட்டக் குழு உறுப்பினா் கலியபெருமாள் பேசினாா்.

முன்னதாக, கொத்தமங்கலத்திலிருந்து ஜோசப் நினைவாக மாநாட்டு கொடியும், பழைய நீடாமங்கலத்திலிருந்து செல்வம் நினைவாக கொடி மரமும், கண்ணம்பாடியிலிருந்து துரைராஜ் நினைவாக கொடியும் பெரியாா் சிலையிலிருந்து ஊா்வலமாகக் கொண்டுவரப்பட்டது. மாநாட்டுக் கொடியை கட்சியின் மூத்த உறுப்பினா் ரத்தினம் ஏற்றிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com