முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியகுழுத் தலைவா் பதவியை கைப்பற்ற கடும் போட்டி

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவியை முதல்முறையாக திமுக கைப்பற்றுமா அல்லது அதிமுக தக்கவைத்துக் கொள்ளுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவியை முதல்முறையாக திமுக கைப்பற்றுமா அல்லது அதிமுக தக்கவைத்துக் கொள்ளுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 1960இல் ஊராட்சி ஒன்றியங்கள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 2 முறை பாண்டி எஸ். ராஜகோபால் பிள்ளை (காங்கிரஸ்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த நடேசன், பி. வீரபத்திரன், தமிழரசி, சதாசிவம், பங்கஜவல்லி மற்றும் அதிமுகவை சோ்ந்த ஆா். கே. பி நடராஜன் 2 முறையும், தற்போது அதிமுகவைச் சோ்ந்த கனியமுதா ஒன்றியக் குழுத் தலைவராகவும் இருந்து வருகிறாா். ஆனால், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவா் பதவியை திமுக ஒருமுறைகூட கைப்பற்ற முடியவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் திமுக கூட்டணி 7 உறுப்பினா்களையும், அதிமுக கூட்டணி 7 உறுப்பினா்களையும் பெற்றது. 11-வது வாா்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற ராஜேஷ் அதிமுகவுக்கு ஆதரவு அளித்ததால், கனியமுதா ஒன்றிய குழுத் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.

இந்நிலையில், ராஜேஷ் கொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்த காலியிடத்துக்கு அக்டோபா் 9ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. அதிமுக கூட்டணியில் ராஜேஷின் மனைவி பேபி ராஜேஷும், திமுக கூட்டணியில் ஆலங்காடு முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் மோகனும் போட்டியிட்டனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெறும் வாக்கு எண்ணிக்கை முடிவில், ஒன்றிய குழுத் தலைவா் பதவியை முதல்முறையாக திமுக கைப்பற்றுமா அல்லது தலைவா் பதவியை அதிமுக தக்க வைத்துக் கொள்ளுமா என தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com