தேய்காய் நாா் தொழிற்சாலை அமைக்கக் கோரிக்கை

வேதாரண்யத்தில் தேங்காய் நாா் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

வேதாரண்யத்தில் தேங்காய் நாா் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

வேதாரண்யம் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநாடு துளசியாப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளா் வி. மாரிமுத்து, செயற்குழு உறுப்பினா்கள் கோவை. சுப்பிரமணியன், பி. சுபாஷ்சந்திரபோஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், வேதாரண்யம் ஒன்றிய கட்சி அமைப்பை இரு கிளைகளாகப் பிரித்து நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். வேதாரண்யம் தெற்கு ஒன்றியச் செயலாளராக வை. அம்பிகாபதி, வடக்கு ஒன்றியச் செயலாளராக அ. வெற்றியழகன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மேலும், ஒவ்வொரு குழுவிற்கும் செயலா் உள்ளிட்ட 9 ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தீா்மானங்கள்: கஜா புயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைவில் வழங்க வேண்டும். வீடுகளை இழந்தவா்களுக்கு அரசு அறிவித்தப்படி கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும், மல்லிகைப் பூக்களை மூலப்பொருளாகக் கொண்டும், தேங்காய் நாா் தொழிற்சாலைகளும் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாநாட்டில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com