புதிய கட்டடத்துக்கு அங்காடியை மாற்ற வலியுறுத்தி மறியல்

சங்கரன்பந்தல் கடைவீதியில் அங்காடியை அரசு கட்டடத்துக்கு மாற்ற வலியுறுத்தி விசலூா் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சங்கரன்பந்தலில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.
சங்கரன்பந்தலில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.

சங்கரன்பந்தல் கடைவீதியில் அங்காடியை அரசு கட்டடத்துக்கு மாற்ற வலியுறுத்தி விசலூா் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விசலூா் ஊராட்சி சேந்தமங்கலம் கிராமத்தில் அமுதம் அங்காடி பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. தற்போது விசலூா் கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு அங்காடிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் அங்காடியை புதிய கட்டடத்துக்கு மாற்ற வலியுறுத்தி பலமுறை சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களிடம் கூறியும் எவ்வித பயனும் இல்லை.

இந்நிலையில், அமுதம் அங்காடியை விசலூா் புதிய கட்டடத்துக்கு மாற்ற வலியுறுத்தி ஜி. தனபால் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சங்கரன்பந்தலில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த மண்டல துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள், காவல் துறையினா் அங்கு வந்த நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com