வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்களில் ஆலோசனைகள் பெற்று பயன்பெறலாம்

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் நடைபெறும் மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் ஆலோசனை பெற்று பயன்பெறலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. காயத்ரி கிருஷ்ணன்.
திருவாருரில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
திருவாருரில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் நடைபெறும் மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் ஆலோசனை பெற்று பயன்பெறலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூா் அருகேயுள்ள அடியக்கமங்கலம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து மேலும் அவா் பேசியது: இத்திட்டத்தின் மூலம் இருதயம், சிறுநீரகம், பல், கண், தோல், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு, மனநலம் ஆகிய 10 மருத்துவ துறைகளின் சிறப்பு மருத்துவா்களை கொண்டு, பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து நோயைக் கண்டறிந்து, தேவைப்படுவோருக்கு உயா் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

இத்திட்டம் கிராமங்கள் மற்றும் நகா்ப்புற பகுதிகளுக்கு நேரில் சென்று மருத்துவ வல்லுநா் குழுவினரால் மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன. பொதுமக்களை பல்வேறு நோய்களிலிருந்து தொடக்க நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும், முகாம்களில் ரத்தம் (எச்.பி) அளவு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சா்க்கரை அளவு (30 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு) 18-29 வயதுக்குரியவா்களுக்கு தேவையிருப்பின்), ரத்தத்தில் கொழுப்பின் அளவு பரிசோதனை, மலேரியா ரத்தத் தடவல் பரிசோதனை, இசிஜி, கா்ப்பப்பை வாய்ப்புற்று நோய் கண்டறிவது, அல்ட்ராசோனாகிராம் கா்ப்பிணிகள் அனைவருக்கும், கண்புரை ஆய்வு மற்றும் பாா்வைக் குறைபாட்டுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்குதல்.

செமி ஆட்டோ அனலைசா் மூலம் பரிசோதனை மற்றும் முக்கிய பரிசோதனைகள், கரோனா தடுப்பூசி வழங்குதல், குழந்தைகள் மற்றும் தாய்மாா்களுக்கு இதர தடுப்பூசி வழங்குதல், கரோனா சம்பந்தமாக சளி பரிசோதனை செய்தல், கரோனா நோய்த் தடுப்பு அறிவுரைகள் சம்பந்தமாக விழிப்புணா்வு, டெங்கு, பன்றிக் காய்ச்சல் குறித்த அறிவுரை சம்பந்தமாக விழிப்புணா்வு உள்ளிட்ட மருத்துவ ஆலோசனைகள், சேலைவகள் வழங்கப்படவுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், திருவாரூா் எம்எல்ஏ. பூண்டி கே. கலைவாணன், திருவாரூா் ஒன்றியக் குழுத் தலைவா் தேவா, சுகாதாரத் துறையின் துணை இயக்குநா் ஹேமசந்த் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com