சட்டக்கூலி கோரி அக்.27 இல் முற்றுகைப் போராட்டம்: நகராட்சி துப்புரவு பணியாளா்கள் முடிவு

நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவித்தபடி சட்டக் கூலி வழங்க வலியுறுத்தி அக்டோா் 27 இல் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.

திருவாரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில் நகராட்சி ஒப்பந்த, நிரந்தர துப்புரவு பணியாளா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் ஆா். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்ட துணைச் செயலாளா் எஸ். வைத்தியநாதன், துணைத் தலைவா் ஜி. ரகுபதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்: துப்புரவுப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவித்தபடி சட்டக் கூலியாக தினமும் ரூ.420 வழங்க வேண்டும். கடந்த ஆண்டுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நிரந்தரத் தொழிலாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். இறந்த பணியாளா்களின் குடும்பத்துக்கு நிதிப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த கரோனா ஊக்கத் தொகையை மூன்று மாதத்துக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அக்டோபா் 27 ஆம் தேதி நகராட்சி முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com