கரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பதில் மக்களுக்கு அக்கறை தேவை: மா. சுப்பிரமணியன்

திருவாரூர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கரோனா  தடுப்பூசி முகாமை  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். 
கரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பதில் மக்களுக்கு அக்கறை தேவை
கரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பதில் மக்களுக்கு அக்கறை தேவை

திருவாரூர்: திருவாரூர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கரோனா  தடுப்பூசி முகாமை  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். 

பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கியபின் அவர் தெரிவித்தது:

தமிழகத்தில் சனிக்கிழமை பிற்பகல் வரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது மாலைக்குள் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனாவின் அடுத்த அலை பரவி வருகிறது. இதனால் அந்த நாடுகளில் தினசரி பதிவாகும் கரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது மூன்றாவது அலையா நான்காவது அலையா என்பது தெரியவில்லை. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதால் மக்கள் விதிமுறைகளை கடைபிடிப்பதில் அலட்சியம் காட்டக்கூடாது.

கரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். விழாக்காலம் என்பதற்காக கரோனா விதிமுறைகளில் தளர்வு கிடையாது.  கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதில் மக்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com