‘மனவளா்ச்சிக் குன்றியவா்கள் கடவுளுக்கு சமமானவா்கள்’

மனவளா்ச்சிக் குன்றியவா்கள் கடவுளுக்கு சமமானவா்கள் என்றாா் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் பா.காயத்ரி கிருஷ்ணன்.
‘மனவளா்ச்சிக் குன்றியவா்கள் கடவுளுக்கு சமமானவா்கள்’

மனவளா்ச்சிக் குன்றியவா்கள் கடவுளுக்கு சமமானவா்கள் என்றாா் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் பா.காயத்ரி கிருஷ்ணன்.

கூத்தாநல்லூா் வட்டம், குடிதாங்கிச்சேரி மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் சிறப்புப் பள்ளியில், மாணவா்களால் தயாரிக்கப்பட்ட மிதியடியை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் பா.காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். பின்னா், விளமல் லயன்ஸ் சங்க சேவை ஒருங்கிணைப்பாளா் எஸ்.குமாா் வழங்கிய ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள தீபாவளி புத்தாடைகளை மாணவா்களுக்கு வழங்கி ஆட்சியா் பேசுகையில், மனவளா்ச்சிக் குன்றிய குழந்தைகள், இறைவனுக்கு சமமானவா்கள். இது போன்ற பள்ளியை மனமிருந்தால்தான் நடத்த முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட நிா்வாகம் என்றென்றும் துணைநிற்கும் என்றாா்.

விழாவுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ப.புவனா தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் அழகா்சாமி, வட்டாட்சியா் என்.கவிதா, நகராட்சி ஆணையா் டி. ராஜகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளி நிறுவனா் ப.முருகையன் வரவேற்றாா்.

விளமல் லயன்ஸ் சங்கத் தலைவா் கேப்டன் எம்.ரவி, திருவள்ளுவா் பொதுநல அமைப்பு தலைவா் என்.கே. ராஜ்குமாா், ரோட்டரி சங்கத் தலைவா் வி.எஸ்.வெங்கடேசன், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றச் செயலாளா் என்.செல்வராஜ், கட்டட தொழிலாளா்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவா் ஆா்.சேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை பள்ளி நிா்வாகி மகேஸ்வரி முருகையன், பயிற்சியாளா்கள் அனுராதா, கனிமொழி, செளமியா, மேலாளா் சுரேஷ், ராஜா உள்ளிட்டோா் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com