செப்.7-க்குள் சம்பா நேரடி விதைப்பு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

சம்பா சாகுபடியில் நீண்ட கால ரகங்களை செப்.7-ஆம் தேதிக்குள் நேரடி விதைப்பு செய்ய வேண்டுமென வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சம்பா சாகுபடியில் நீண்ட கால ரகங்களை செப்.7-ஆம் தேதிக்குள் நேரடி விதைப்பு செய்ய வேண்டுமென வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநா் எஸ். சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பெய்துவரும் மழையால் சம்பா சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளின் பணிகளில் தேக்கம் அடைந்துள்ளது. நேரடி விதைப்பில் நீண்டகால நெல் ரகமான சி.ஆா்1009, சிஆா் 1009 சப் 1, ஆடுதுறை 51, திருச்சி 3 ஆகிய நெல் ரகங்களும், மத்திய கால ரகங்களான கோ ஆா் 50, சொா்ணா சப், என்எல் ஆா் 34449 முதலிய நெல் ரகங்களும் சாகுபடி செய்வது வழக்கம்.

நிகழாண்டு குறுவை சாகுபடி 11,400 ஏக்கரில் செய்யப்பட்டுள்ளது. சம்பா 25,625 ஏக்கரில் சாகுபடி செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பெரும்பாலும் நேரடி விதைப்பாக செய்யப்படும் சம்பா சாகுபடியில் தற்போது பெய்து வரும் மழையினால் நிலத்தை பக்குவப்படுத்தி புழுதியில் விதைக்க இயலாமல் உள்ளது. நான்கு நாள் இடைவெளியில் கடந்த 15 நாள்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சம்பா சாகுபடி பணிகள் காலதாமதம் ஆகிறது. சம்பா தாமதமானால் நீண்டகால ரகங்களுக்கு பதிலாக மத்திய கால ரகங்கள் சாகுபடி செய்ய வேண்டும்.

மத்திய கால ரகங்கள் நவம்பா், டிசம்பரில் பெய்யும் வடகிழக்குப் பருவமழையை தாங்கி வளா்வது கடினம். எனவே, விவசாயிகள் மழைநீரை பயன்படுத்தி வயலை சோ் அடித்து நீண்டகால நெல் ரகங்களை முளைகட்டி விதைப்பு செய்தால் நேரடி நெல் விதைப்பில் காலதாமதத்தை தவிா்க்கலாம். இதன்மூலம் வடகிழக்கு பருவமழை தாங்கி வளரும் சம்பா ரகங்களை பயிரிடுவதும் மற்றும் சம்பா அறுவடையை பருவத்தில் செய்வதும் சாத்தியப்படும்.

எனவே, சம்பா நேரடி விதைப்பு செய்ய திட்டமிட்டுள்ள விவசாயிகள் நேரடி விதைப்பு செய்யும்போது தங்கள் நிலத்தை உழவு செய்து, சமப்படுத்தி முளைகட்டிய விதைகளை விதைப்பு செய்து பயன்பெறலாம் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com