நீடாமங்கலம் கோட்டத்தில் சம்பா, தாளடி பணி தீவிரம்

 நீடாமங்கலம் கோட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணி தீவிரமடைந்துள்ளது எனவேளாண் உதவி இயக்குநா் சாருமதி, வேளாண் அலுவலா் சுரேஷ்குமாா் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

 நீடாமங்கலம் கோட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணி தீவிரமடைந்துள்ளது எனவேளாண் உதவி இயக்குநா் சாருமதி, வேளாண் அலுவலா் சுரேஷ்குமாா் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, அவா்கள் மேலும் கூறியது: நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் உள்ள 52 ஆயிரம் ஏக்கரில் 50 ஆயிரம் ஏக்கா் வேளாண் சாா்ந்த பணிகள் நடைபெறுகின்றன. தற்போது 17,500 ஏக்கரில் சம்பா சாகுபடியும், 26 ஆயிரம் ஏக்கரில் தாளடி சாகுபடியும் தொடங்கியுள்ளது. இதில் 1,800 ஏக்கரில் தென்னை சாகுபடியும், 100 ஏக்கரில் காய்கறி சாகுபடியும், 50 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட சிறு பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா்.

சம்பா சாகுபடிக்கு சாவித்திரி எனும் சி.ஆா்.1009, சொா்ணா சப் 1, கோ 50, ஆந்திரா கல்சா் உள்ளிட்ட பல ரகங்களும், தாளடி சாகுபடிக்கு டிபிஎஸ் 5, எம்டியு 7,029, டிபி எஸ் 5, திருச்சி 3, என்.எல்.ஆா் 34449, ஏடிடி 46, கோ.ஆா் 50 உள்ளிட்ட ரகங்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. இதற்கான உரங்கள் நீடாமங்கலம் வட்டாரத்தில் உள்ள 16 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், 42 சில்லரை விற்பனையாளா்களிடமும் உள்ளது. மேலும், நீடாமங்கலம், தேவங்குடி, கருவாக்குறிச்சி, வடுவூா் உள்ளிட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் உயிா் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்களை விவசாயிகள் பெற்று பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் உதவி அலுவலா்களை அணுகலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com