கூத்தாநல்லூர்: 20 கிராம மக்கள் பயன்படுத்தும் பாதுக்காப்பில்லாத பாலம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் பாண்டுக்குடியில், 20 கிராம மக்கள் செல்லக் கூடிய பாலம் பாதுக்காப்பில்லாத பாலமாக கவனிப்பாரற்று அமைந்துள்ளது.
20 கிராம மக்கள் பயன்படுத்தும் பாதுக்காப்பில்லாத பாலம்
20 கிராம மக்கள் பயன்படுத்தும் பாதுக்காப்பில்லாத பாலம்

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் பாண்டுக்குடியில், 20 கிராம மக்கள் செல்லக் கூடிய பாலம் பாதுக்காப்பில்லாத பாலமாக கவனிப்பாரற்று அமைந்துள்ளது.

கூத்தாநல்லூர் அடுத்த, மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட, கொத்தங்குடி ஊராட்சி. இந்த ஊராட்சியில் பாண்டுக்குயில், வெண்ணாற்றின் குறுக்கே, கூத்தாநல்லூரையும், பாண்டுக்குடியையும் இணைக்கக் கூடிய இரும்புப் பாலம் அமைந்துள்ளது. கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மிகப்பழமையான இப்பாலத்தின் வழியாக த்தான், சேனைக்கரை, கூப்பாச்சிக்கோட்டை, வடகோவனூர், தென் கோவனூர், திருராமேஸ்வரம், தட்டாங்கோயில், திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி உள்ளிட்ட 20 கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.

தினமும் 700-க்கும் மேற்பட்ட இருச்சக்கர வாகனங்களும், ஆயிரக் கணக்கானவர்கள் இப்பாலத்தில்தான் சென்று வருகின்றனர். மேலும், இப்பாலத்தின் அருகே அரசுப் பள்ளிக் கூடம் இருப்பதால் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் செல்கின்றனர்.

இப்பாலத்தின், கூத்தாநல்லூர் பகுதியின் நுழைவில் எந்தவித தடுப்புச் சுவரும் இல்லாமல், பொதுமக்களுக்கு பாதுக்காப்பில்லாத நிலையில் உள்ளன. அதே போல், பாண்டுக்குடி பகுதியில் பாலத்தின் நுழைவு வாயிலின் இரு பக்கமும் தடுப்புச் சுவரே இல்லாமல் உள்ளது. இருசக்கர வாகனம் மட்டுமே செல்லக் கூடிய இந்த சிறிய இரும்புப் பாலத்தில், இரவு நேரங்களில் செல்பவர்கள், தடுப்புச் சுவர் இல்லாததால், நிலை தடுமாறி கீழே விழுந்தும், சில சமயங்களில் ஆற்றில் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி கூறியது. பல ஆண்டுகளாக இப்பாலம் பராமரிக்கப் படாமல் உள்ளது. இப்பகுதியில் செல்லக் கூடிய அனைவரும் பாதுக்காப்பில்லாமல் பயந்து, பயந்துதான் செல்லக் கூடிய நிலையில் உள்ளனர்.

பழமையான இந்தப் பாலம் மிகச் சிறியதாக உள்ளது. பிரசவ காலங்களில் கூட அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமானால் கூட, இப்பாலத்தை பயன்படுத்த முடியவில்லை. 10 கிலோ மீட்டர் சுற்றிதான் செல்ல வேண்டும்.

அவசர ஊர்தி போகக் கூடிய அளவிற்கு, பாலத்தை விரிவுப் படுத்தித் தர வேண்டும். பாலத்தில் நுழைகின்ற இரண்டு பக்கமும் பாதுக்காப்புச் சுவர் எழுப்ப வேண்டும். மேலும், கூத்தாநல்லூரிலிருந்து பாலத்திற்கு வரக்கூடிய 100 அடி அளவுள்ள தெருவில், நீண்ட ஆண்டுகளாக தார்ச்சாலை அமைக்கப்படவில்லை என்றார்.

இதுகுறித்து, கொத்தங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திகா ராதாகிருஷ்ணன் கூறியது.பாலத்திற்கு வரக்கூடிய தெருவில் விரைவில் தார்ச்சாலை போடப்படும். இரும்புப் பாலத்தின் நுழைவு வாயிலில், தடுப்புச் சுவர் அமைக்க ஏற்பாடு செய்கிறேன். ஒரு பாலத்திற்கும், இன்னொரு பாலத்திற்கும் 200 மீட்டர் இடைவெளிக்குள் இருப்பதால், இந்த இடத்தில் இன்னொரு பாலம் கட்டுவதில் சிரமம் உள்ளது. இந்த இரும்புப் பாலத்தில் உள்ள குறைபாடுகளைக் கழைந்து, இப்பாலம் வழியாகச் செல்லக் கூடிய பொது மக்களுக்கு பாதுக்காப்பை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com