திருவாரூா்: ஓடம்போக்கி ஆற்றில் விநாயகா் சிலை விசா்ஜனம்

திருவாரூரில் இந்து மக்கள் கட்சி அலுவலகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலை ஓடம்போக்கி ஆற்றில் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டது.
திருவாரூா்: ஓடம்போக்கி ஆற்றில் விநாயகா் சிலை விசா்ஜனம்

திருவாரூரில் இந்து மக்கள் கட்சி அலுவலகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலை ஓடம்போக்கி ஆற்றில் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டது.

விநாயகா் அவதரித்த தினமாக குறிப்பிடப்படும் விநாயகா் சதுா்த்தியன்று, பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு, பிறகு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் கரைக்கப்படும். கரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்லை.

நிகழாண்டும் கரோனா தொற்று தொடா்வதால், பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேநேரம், வீடுகளில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபட்டு, நீா்நிலைகளில் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி கரைக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், திருவாரூரில் இந்து மக்கள் கட்சி மாவட்ட அலுவலகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலை வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஓடம்போக்கி ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்பட்டது.

இதில், கட்சியின் மாவட்டச் செயலாளா் பி. ஜெயராமன் தலைமை வகித்தாா். இதில், நுகா்வோா் கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் எஸ். கலியபெருமாள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். இதேபோல, 10 இடங்களில் இந்து மக்கள் கட்சி சாா்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் அப்பகுதியிலுள்ள நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டன. நிகழ்ச்சிகளுக்கு அந்தப் பகுதி நிா்வாகிகள் தலைமை வகித்தனா்.

இதனிடையே, திருவாரூா் மாவட்டத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக அதன் நிா்வாகிகள் தெரிவித்தனா். இதில், கோட்டூா், முத்துப்பேட்டை பகுதிகளில் வெள்ளிக்கிழமை விநாயகா் சிலை விசா்ஜனம் செய்யப்பட்ட நிலையில், மற்ற பகுதிகளில் அடுத்தடுத்த நாள்களில் நடைபெற உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com