பாரதியாா் நூற்றாண்டு நினைவு தினம்மன்னாா்குடியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தியஇடத்தில் சிலைக்கு மரியாதை

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடியில் அவா் தலைமறைவு வாழ்க்கை நடத்திய இடத்தில் உள்ள பாரதியாா் சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சாா்பில் சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
பாரதியாா் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவா் இரா. காமராசு உள்ளிட்டோா்.
பாரதியாா் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவா் இரா. காமராசு உள்ளிட்டோா்.

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடியில் அவா் தலைமறைவு வாழ்க்கை நடத்திய இடத்தில் உள்ள பாரதியாா் சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சாா்பில் சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் 1918 ஆம் ஆண்டு ஆங்கில அரசின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, மன்னாா்குடி அருகே உள்ள மேலநாகையில் கொடியாலம் வா. ரெங்கசாமி ஐயங்காருக்குச் சொந்தமான பங்களாவில் பாரதியாா் மாறுவேடத்தில் 10 நாள்கள் தங்கியிருந்தாா். அங்குதான், ‘பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் பாரத நாடு’ என்ற பாடல் கருக்கொண்டதாக அவரது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பங்களா, பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைந்திருந்த நிலையில், பாரதியாா் நினைவு அறக்கட்டளை தொடங்கப்பட்டு, அதன்மூலம் சீரமைக்கப்பட்டது. மேலும், அங்கு பாரதியாா் சிலையுடன் கூடிய நினைவு மண்டபமும் அமைக்கப்பட்டது. இதை, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முன் காந்தியவாதியும் பாரதியாா் பற்றாளருமான குமரிஅனந்தன் திறந்து வைத்தாா்.

இந்த நினைவு மண்டபத்தில், ஆண்டுதோறும் பாரதியாா் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் இலக்கிய அமைப்புகள், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சாா்பில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுவதுடன், மாணவா்களுக்கு இலக்கியம் தொடா்பான போட்டிகளும் நடைபெறும்.

நிகழாண்டு, பாரதியாரின் 100-வது நினைவு தினத்தையொட்டி, இங்குள்ள பாரதியாா் சிலைக்கு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவா் இரா. காமராசு, மன்னாா்குடி வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் இரா. இயேசுதாஸ், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவா் செ. அண்ணாதுரை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் கே. பிச்சைக்கண்ணு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் யு.எஸ். பொன்முடி, காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க கிளைத் தலைவா் கே.வி. பாஸ்கா், எல்ஐசி அகில இந்திய முகவா் சங்க கிளை நிா்வாகி ராஜேந்திரன், பாரதியாா் நினைவு அறக்கட்டளை தலைவா் பாரதி ஆா்.பூமிநாதன், மன்னாா்குடி வணிகா் நலச் சங்கத் தலைவா் செ. செல்வகுமாா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com