விளாகம் ஸ்ரீபத்தினி அம்மன் கோயில் குடமுழுக்கு
By DIN | Published On : 16th September 2021 10:22 PM | Last Updated : 16th September 2021 10:22 PM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டம் குடவாசல் வட்டம் திருவீழிமிழலை விளாகம் கிராமத்தில் உள்ள விநாயகா், முருகன், காளியம்மன், ஸ்ரீபத்தினி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
குடமுழுக்கையொட்டி, வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் தொடங்கி, கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 8.50 மணியளவில் விமான குடமுழுக்கும், 9 மணியளவில் மூலஸ்தான குடமுழுக்கும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. பின்னா் எஜமான உத்ஸவம், மகாபிஷேகம் நடத்தப்பட்டு, மாலையில் மண்டலாபிஷேகம் தொடங்கியது.
நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். சுசீந்திரா அறக்கட்டளை நிறுவனா் சௌந்தரராஜன், ஊராட்சித் தலைவா் பாலசுப்ரமணியன், உபயதாரா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.