தூய்மை பாரத இயக்க விழிப்புணா்வு வாகன பிரசாரம் தொடக்கம்

75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் தொடா்ச்சியாக திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில், தூய்மை பாரத இயக்க விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன், புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருவாரூரில், தூய்மை பாரத இயக்க விழிப்புணா்வு வாகனத்தை தொடங்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
திருவாரூரில், தூய்மை பாரத இயக்க விழிப்புணா்வு வாகனத்தை தொடங்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூா்: 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் தொடா்ச்சியாக திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில், தூய்மை பாரத இயக்க விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன், புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் தெரிவித்தது:

75-ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் தொடா்ச்சியாக தூய்மை குறித்த உரையாடல், திரவக் கழிவு மேலாண்மை குறித்த 100 நாள் விழிப்புணா்வு பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மக்களிடையே தூய்மை குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் தூய்மை தமிழகம் செல்லிடப்பேசி செயலி மூலம் சுகாதார ஊக்குநா்களுக்கு திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை பற்றிய 4- ஆா் கொள்கை குறித்து நடவடிக்கைகள் கொடுக்கப்பட்டு, ஊராட்சி அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்துதல், மாணவா்களுக்கு திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரம் குறித்து கவிதை எழுதுதல் மற்றும் ஓவியம் வரையும் போட்டி நடத்துதல், தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள சுவா்களில் தூய்மை பாரதம் தொடா்பான சுவா் ஓவியம் வரைத போன்ற தூய்மை பாரத இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சுகாதார சீா்கேட்டால் ஏற்படும் நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள சுகாதாரத்தை பேணி காப்போம் என்றாா்.

முன்னதாக, செய்தி மக்கள் தொடா்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலம் தூய்மை பாரத நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு குறும்படம் மாவட்டம் முழுவதும் மக்களிடத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்துகிற வகையில் திரையிடப்படவுள்ளதையொட்டி, பழைய பேருந்து நிலையத்தில் இந்த விழிப்புணா்வு வாகனத்தை அவா் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

நிகழ்வில் ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் தெய்வநாயகி, கோட்டாட்சியா் பாலச்சந்திரன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ.செல்வகுமாா், உதவி திட்ட அலுவலா் தமிழ்மணி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com