கூத்தாநல்லூர்: பொதக்குடியை பேரூராட்சியாக மாற்ற எம்எல்ஏவிடம் மனு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட பொதக்குடியை, பேரூராட்சியாக மாற்றக்கோரி,
கூத்தாநல்லூர்: பொதக்குடியை பேரூராட்சியாக மாற்ற எம்எல்ஏவிடம் மனு
கூத்தாநல்லூர்: பொதக்குடியை பேரூராட்சியாக மாற்ற எம்எல்ஏவிடம் மனு

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட பொதக்குடியை, பேரூராட்சியாக மாற்றக்கோரி, திருவாரூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணனிடம், ஜன்னத்வல் ஜமாஅத் சார்பில், நிர்வாகிகள் என்.எம்.நூர்கனி, ஏ.புள்யூ.கஸ்ஸாலி, என்.எம்.அப்துல் காதர், எஸ்.டி.ஏ.நஜீமுதீன் உள்ளிட்டோர் கோரிக்கை மனுவை வழங்கினர். 

மனுவில் கூறியுள்ளது, சிஐஏ, என்.சி.ஆர். உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என சட்டத்தை உருவாக்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பொதக்குடி ஜன்னத் வல் ஜமாஅத் நலச் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

பொதக்குடி ஊராட்சிக்கு சம்பந்தப்பட்ட தெருக்களில் நீண்ட ஆண்டுகளாக சாலை வசதிகள் செய்யாமல், பழுதடைந்து உள்ள சாலைகளை, மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, சாலைகளை புதுப்பிக்க வேண்டும். பொதக்குடி ஊராட்சியில் மக்கள் தொகை கணக்கின்படி அங்காடிகள் இல்லாமல், இரண்டு அங்காடிகள் மட்டுமே செயல்படுகின்றன. பொதக்குடி காந்தி தெரு அங்காடியில் 1850 கார்டுகளும், சேகரையில் உள்ள அங்காடியில் 1350 கார்டுகளும் உள்ளன. இவைகளைப் பிரித்து, 4 அங்காடிகளாக ஏற்படுத்த வேண்டும். 

மேலும், பொதக்குடி உருவான காலத்திலிருந்து, கிராம ஊராட்சியாகவே இருந்து வருகிறது. தற்போதைய மக்கள் தொகை கணக்குப்படி, பொதக்குடி மற்றும் ஆய்குடி ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, பொதக்குடியை பேரூராட்சியாக உருவாக்க வேண்டும். பொதக்குடி மன்னார்குடி சட்டப்பேரவை தொகுதியில் உள்ளது. இதில், பொதக்குடி கூத்தாநல்லூர் வட்டத்தில் உள்ளது. ஆனால், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பொதக்குடி உள்ளது. பொதக்குடியை, திருவாரூர்  சட்டப்பேரவை தொகுதியில் இணைக்கும் படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com