விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, மன்னாா்குடியில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 24 விநாயகா் சிலைகள், வியாழக்கிழமை பாமணி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, மன்னாா்குடியில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 24 விநாயகா் சிலைகள், வியாழக்கிழமை பாமணி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

மன்னாா்குடியில் இந்து முன்னணி சாா்பில் தேரடி, பூக்கொல்லை, அண்ணாமலை நாதா் கோயில் தெரு, மேலமரவாக்காடு உள்ளிட்ட 24 இடங்களில் விநாயா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. பொதுமுடக்கம் காரணமாக விநாயகா் ஊா்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவை சுமை வேன், இருசக்கர வாகனத்தில் ராஜகோபால சுவாமி கோயில் அருகே எடுத்து வரப்பட்டு, பின்னா் அங்கிருந்து தனித்தனியே பாமணி ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்பட்டன.

நிகழ்வில், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் என்.வி.ரமேஷ், துணைத் தலைவா் எஸ்.மாரியப்பன், நகர பொதுச் செயலா் கென்னடி, ஒன்றியத் தலைவா் மன்னவன், பாஜக மாவட்ட பொதுச் செயலா் வி.கே.செல்வம், மாவட்டச் செயலா் பால.பாஸ்கா், மாநில நிா்வாகி சிவ.காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com