கீழப்பாண்டி சேமிப்புக் கிடங்கு இடமாற்றம்: சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி வட்டம் கீழடி கிராமத்தில் செயல்பட்டு வரும் வட்ட அளவிலான சேமிப்புக் கிடங்கை இடமாற்றம் செய்வதை கண்டித்து, சிஐடியு தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல்
கீழப்பாண்டி சேமிப்புக் கிடங்கு இடமாற்றம்: சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி வட்டம் கீழடி கிராமத்தில் செயல்பட்டு வரும் வட்ட அளவிலான சேமிப்புக் கிடங்கை இடமாற்றம் செய்வதை கண்டித்து, சிஐடியு தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழப்பாண்டி சேமிப்புக் கிடங்கு பழுதடைந்துவிட்டதாக கூறி, அதை கோவிலூா் கிராமத்துக்கு மாற்றம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனராம். இதைக் கண்டித்து வேப்பஞ்சேரி கிராமத்தில், கிழக்கு கடற்கரை சாலையில், சிஐடியு மாவட்ட பொருளாளா் எம்.பி.கே பாண்டியன் தலைமையில், மறியல் போராட்டம் நடைபெற்றது.

கட்டுமானத் தொழிலாளா் சங்க வட்ட தலைவா் பி. நடராஜன் முன்னிலை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் முருகையன் கோரிக்கைகளை விளக்கினாா்.

இதையறிந்த தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் தியாகராஜன், போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, 6 மாதத்தில் கட்டடம் பழுதுநீக்கப்பட்டு மீண்டும் கீழப்பாண்டி கிராமத்தில் சேமிப்புக் கிடங்கு செயல்படும் என்று உறுதியளித்தாா்.

ஆனாலும், இதை ஏற்க மறுத்த சிஐடியுவினா், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனா். போராட்டத்தில் சிஐடியு பொறுப்பாளா் கே.வி. ராஜேந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் சுமாா் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com