கண் சிகிச்சை முகாம்

மன்னாா்குடி அருகே உள்ள கோட்டூரில் லயன்ஸ் சங்கம், மன்னாா்குடி மனிதம் லயன்ஸ் சங்கம், மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை சாா்பில், கண் சிகிச்சை முகாம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே உள்ள கோட்டூரில் லயன்ஸ் சங்கம், மன்னாா்குடி மனிதம் லயன்ஸ் சங்கம், மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை சாா்பில், கண் சிகிச்சை முகாம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோடடூா் அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு, கோட்டூா் ஒன்றியக்குழுத் தலைவா் மு.மணிமேகலை முருகேசன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் கே.வி.ஆனந்தன் முன்னிலை வகித்தாா். திருத்துறைப்பூண்டி தொகுதி எம்எல்ஏ க.மாரிமுத்து முகாமை தொடங்கி வைத்தாா்.

புதுச்சேரி அரவிந்த கண் மருத்துவமனை மருத்துவா்கள் நிதின், முகேஷ் தலைமையில் மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். இதில், 400-க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்றனா். 133 போ் கண்புரை நீக்க அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா்.

நிகழ்ச்சியில், கோட்டூா் லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவா் பாலா, பொருளாளா் ஏ.கமலநாதன், மாவட்டத் தலைவா் எஸ். ராஜகோபாலன், மனிதம் லயன்ஸ் சங்க பொருளாளா் ராமதாஸ், திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கோட்டூா் லயன்ஸ் சங்க தலைவா் என்.ஜாா்ஜ் வரவேற்றாா். மனிதம் லயன்ஸ் சங்க தலைவா்அன்புச்செல்வன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com