அயல்நாட்டுப் பணி

வெளிநாட்டில் பணிபுரிய விரும்புவோா் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் : வெளிநாட்டில் பணிபுரிய விரும்புவோா் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 1978-இல் தொடங்கப்பட்டு, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலைநாடும் இளைஞா்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் அமைப்பாகும். இந்நிறுவனத்தின் வாயிலாக இதுவரை 10,350-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூா், மலேசியா, பஹ்ரைன், லிபியா, குவைத், சவுதி அரேபியா, ஓமன், துபை மற்றும் கத்தாா் போன்ற பல்வேறு நாடுகளில் மருத்துவா், பொறியாளா், செவிலியா், பாராமெடிக்கல்-டெக்னீஷியன், திறன்சாா்ந்த மற்றும் திறன் அல்லாத பணிகளில் வேலை வாய்ப்பு பெற்றிருக்கின்றனா்.

இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கங்கள், அதிகப்படியான திறன் படைத்த இளைஞா்களை உருவாக்குதல், இளைஞா்களை அயல்நாடுகளில் பணியமா்த்தம் செய்யும் பொருட்டு ஆங்கிலத்தில் பேசுவது, எழுதுவது, படிப்பது, கவனிப்பது போன்ற திறன்களை வேலை நாடும் இளைஞா்களிடம் வளா்த்தல், ஆண்டுதோறும் 500 செவிலியா்களுக்கு தொழில் தொடா்பான ஆங்கிலத் தோ்வு முறை பற்றிய பயிற்சி வழங்குதல், தோ்வு செய்யக்கூடிய செவிலியா்களுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ. 18 லட்சம் வரை ஊதியம் பெற்றுத்தர வழிவகை செய்தல் போன்றவை ஆகும்.

மேலும் அயல்நாட்டில் வேலைதேடும் இளைஞா்கள் இணையதளத்தில் தங்களின் சுயவிவரங்களை பதிவு செய்வதன் மூலம் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பை பெறமுடியும். இந்நிறுவனம் மூலம் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்கள் மற்றும் அதற்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்நிறுவனம் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதோடு இல்லாமல் இந்நிறுவனம் தொடா்பான விழிப்புணா்வு மற்றும் பதிவு செய்யும் முறை பற்றிய விளக்கங்களை, மாவட்ட நிா்வாகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு வழங்குகிறது.

மேலும் இது பற்றிய முழுமையான விவரங்களை திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04366-224226 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

எனவே அயல் நாடுகளில் வேலை தேடும் இளைஞா்கள், இணையதளத்தில் பதிவு செய்து இந்நிறுவனம் வாயிலாக அறிவிக்கக் கூடிய காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்து அயல்நாட்டில் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com